பாலின இடைவௌியை குறைக்கும் வகையில் தொழில் சட்ட திருத்தம்

பாலின இடைவௌியை குறைக்கும் வகையில் தொழில் சட்ட திருத்தம்

 பாலின இடைவெளியைக் குறைக்கும் வகையில் பெண் பணியாளர்கள் தொடர்பாக சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் கணக்கில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் தொழிலாளர்களில் 33 வீதமானவர்கள் பெண்களாவர். பாலின அடிப்படையிலான இடைவௌி குறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 20வது இடத்தில் உள்ளது. தற்போது தொழிலாளர் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இரவு நேர பணித் தடைகள் நீக்குதல், பகுதி நேர மற்றும் இலகு பணி வாய்ப்புகளை வழங்குவதல் போன்ற நடவடிக்கைகளினூடாக பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பிரதாயபூர்வமாக ஆண்கள் மாத்திரமே இணையும் தொழில் வாய்ப்புக்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டையும் வழங்குவதும் அவசியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்ட அமைப்புக்காக இதுவரை பெறப்பட்ட முன்மொழிவுகளின் சுருக்கம் ஜூன் 14 அன்று தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image