பயங்கரவாத எதிரப்பு சட்டமூலத்தை தொழிலாளர் தேசிய சங்கம் எதிர்க்கின்றது - சோ.ஸ்ரீதரன்

பயங்கரவாத எதிரப்பு சட்டமூலத்தை தொழிலாளர் தேசிய சங்கம் எதிர்க்கின்றது - சோ.ஸ்ரீதரன்

இலங்கையில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் புதிய 'பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன்; தெரிவித்தார்.


அட்டனில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சட்டமூலம் பாராளுமன்றித்தில் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களையும் எதனையும் முன்னெடுக்க முடியாது போகும் என்று தெரிவித்தார்.
தொழிற்சங்க வழி நடத்தலின் ஊடாக தொழிற்சங்க அங்கத்தவர்கள் தங்களின் சம்பளம், தொழில் போன்ற பிரச்சினைகளுக்கு ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலமாக வென்றெடுத்தனர்.

ஆனால் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் காரணமாக எதிர்காலத்தில் தொழிலாளர்களின் கருத்து சுதந்திரம், போராட்ட சுதந்திரம், போன்ற ஜனநாயக ரீதியான போராட்ட வடிவங்களுக்கு தடையேற்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் தொழிலாளர்கள் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையும் அந்த தொழிலாளர்களை வழிநடாத்த தொழிற்சங்கங்களுக்கும் முடியாத நிலையும் இருக்கின்றது என்பதால் புதிதாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தொழிலாளர் தேசிய சங்கம் எதிர்க்கின்றது என்றும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image