வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம்!

வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம்!

நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகுல இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுடைய நலனுக்காக மலசல கூடத்தை விஸ்தரிக்கவோ அல்லது சமையலறையை விஸ்தரிப்பு செய்தாலோ தொழிலாளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் தோட்ட நிர்வாகம் இன்று இதகல தோட்டத்தில் 50 ஏக்கர் காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தும் கூட மௌனிப்பது ஏன் இதன் பின்னணி என்ன? காணி சுவீகரிப்பு விளைவாக இதகல தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நிலைமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்திற்கும் அறிவித்துள்ளேன். தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றின் ஊடாக பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரப்படும்.

மேலும் மலையகப் பெருந்தோட்ட காணிகளின் வெளியார் அபகரிக்கின்ற செயல்பாடு தொடர்கின்றது இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பலமுறை நான் எடுத்துரைத்துள்ளேன் பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் முறையான தீர்வு ஒன்று பெற்று தரப்பட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்தார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image