ஆசிரியர் சேவை தெரிவுப்பரீட்சையில் தோற்றவுள்ள பட்டதாரிகள் கவனத்திற்கு

ஆசிரியர் சேவை தெரிவுப்பரீட்சையில் தோற்றவுள்ள பட்டதாரிகள் கவனத்திற்கு

கல்வி மறுசீரமைப்புக்கு அப்பாற் சென்ற பரந்த கல்வி மாற்ற செயற்பாட்டினூடாக படித்த அனைத்தையும் மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி வருகிற வர்களை உருவாக்குவது அல்ல என்றும் மேலதிக வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்ற வேண்டாம் என்றும் கல்வியமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.

கல்வியமைச்சில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் போட்டி 2021 இல் தேசிய அளவில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வௌியிட்டபோது, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற்ற போட்டிப்பரீட்சைக்கான மேலதிக வகுப்பு தொடர்பில் வௌியிடப்பட்ட விளம்பரம் குறித்தே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கணிதத்தில் ஏற்படும் சாதாரண சிக்கல்கள், சாதாரண கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடியது போன்ற சட்டென்று யோசித்த முடிவெடுக்கக்கூடிய திறமை ஆசிரியர்களாக சேவையாற்ற எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளுக்கு இருப்பது மிகவும் அவசியம். அப்படியான ஆசிரியர்களே திறமை மிக்க எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்வதற்கு கூட மேலதிக வகுப்புக்களை நம்பியிருப்பவர்களால் அது சாத்தியப்படாது. இவ்வாறான செயற்பாடுகளினால் கல்விச் சேவையில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என்பது தௌிவாகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி அதிகாரிகளாக அரச சேவையில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகளில் ஆசிரியர் சேவையில் இணைய விரும்பும் உரிய வயதெல்லையை உடையவர்களுக்காக பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இத்தெரிவு செய்யும் பரீட்சையானது கடினமான பரீட்சையாக இருக்காது. எனவே தேவையற்ற முறையில் மேலதிக பரீட்சைகளுக்கு செல்வதை தவிர்த்து பரீட்சைக்கு தைரியமாக முகங்கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image