'அகப்பட வேண்டாம்' வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பொதுமக்களை அறிவுறுத்தல்

'அகப்பட வேண்டாம்' வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பொதுமக்களை அறிவுறுத்தல்

ஆட்கடத்தலில் 'அகப்பட வேண்டாம்' என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணயக்கார பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் என அனைவரையும் விசாரணை செய்து கிராம மட்டத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதாகவும், தேவைப்பட்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஆட்கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் 'அகப்பட வேண்டாம்' நிகழ்ச்சித் திட்டம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும்  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்கடத்தலை கையாள்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு இல்லை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கே உள்ளது என்றும், தவறுகளை குறைப்பதற்காக அகப்பட்டுக்  கொள்ளாதீர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

வெளிநாட்டிற்கு செல்லும்போது தெரிந்தோ தெரியாமலோ ஆட்கடத்தலை குறைக்க வேண்டும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image