அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் கருத்து

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் கருத்து

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 26 பில்லியன் ரூபாவாகும்.

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில், பணத்தை அச்சிட்டு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் முதலாவது நாடாக இலங்கை மாறும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தெரணியகல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டபோதிலும், அன்றாட செலவுகளுக்காக அது பயன்படுத்தப்படவில்லை.

அந்த நிதி முகாமைத்துவத்தினால், பணவீக்கம் தாக்கம் செலுத்தவில்லை. இந்தப் புத்தாண்டில், முதலாம் திகதி தொடக்கம், 12 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கு, மதிப்பிடப்பட்ட செலவாக 80.5 பில்லியன் ரூபாவாக உள்ளது.

ஆனால், வருமானம் 26 பில்லியன் ரூபாவாக உள்ளது. எனவே, 54 பில்லியன் ரூபாவைத் தேடவேண்டியுள்ளது.

இந்த 80 பில்லியன் ரூபாவில் உள்ள எந்தவொரு செலவையும் பிற்போடவோ அல்லது மாற்றவோ முடியாது.

உதாரணமாக, ஓய்வூதிய கொடுப்பனவு 26 பில்லியன் ரூபாவாகும். ஓய்வூதியம் என்பது, ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு செலுத்த வேண்டியதாகும்.

அதநேரம், சமுர்த்தி கொடுப்பனவு, உரக் கொடுப்பனவு மற்றும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவு என எதனையும் பிற்போட முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image