டீசல் விலை குறைப்பினால் பஸ் கட்டணம் குறைக்கப்படாது!

டீசல் விலை குறைப்பினால் பஸ் கட்டணம் குறைக்கப்படாது!

ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பஸ் கட்டணத்தில் கட்டண சதவீதத்தை கணக்கிடுவது இன்னும் கடினமானது என டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பஸ் கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு ஒரு லிட்டர் டீசலின் விலை 4% அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும். சமீபத்திய விலைக் குறைப்புடன், சுமார் 2% வரை உள்ள நிலையில் கட்டணத் திருத்தம் செய்வது உசிதமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், கட்டணக் குறைப்பானது போக்குவரத்து சேவையை சீர்க்குழைக்க வழிவகுக்கும் என்றும் எவ்வாறு இருப்பினும் தற்போது பொதுப் போக்குவரத்து சேவை வழங்க போதுமான எரிபொருளை பெற முடிந்துள்ள நிலையில் முழுமையான சேவையை தாம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ரயில் சேவையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ரயில் சேவைகள் பயன்படுத்தப்படுகிறதோ இல்லையோ, சேவைக்காக பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில், ரயில்கள் மிகவும் தாமதமாக வருவதால், மக்கள் சரியான நேரத்தில் தங்கள் இலக்குகளை அடைய முடியவில்லை. இதன் விளைவாக, மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தனியார் பேருந்து சேவையை பயன்படுத்துமாறு இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது. முயற்சி வெற்றி பெற்றால், பஸ் கட்டணத்தை கணிசமான அளவில் குறைக்கலாம்,'' என்றார்.

"தற்போதைய பேருந்து கட்டணம் மிக அதிகமாக உள்ளது, ஆனால் இறக்குமதி தொடங்கியவுடன் விரைவில் குறைக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image