புத்தாண்டில் அமுலாகியுள்ள வருமான வரி தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

புத்தாண்டில் அமுலாகியுள்ள வருமான வரி தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..​

6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.​ சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படும் பட்சத்தில் 6 சதவீதம் தொடக்கம் 36 சதவீதம் வரையில் 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடப்படவுள்ளது.

இதற்கமைய, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் 3 ஆயிரத்து 500 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளது.
 
2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் 10 ஆயிரத்து 500 ரூபாவும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் நபரிடம் 21 ஆயிரம் ரூபாவும், வருமான வரியாக அறவிடப்படவுள்ளது.
 
3 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபரிடம் 35 ஆயிரம் ரூபா வரியாக அறவிடப்படவுள்ளதுடன், 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் ஈட்டுபவர் 52 ஆயிரத்து 500 ரூபாவை வருமான வரியாக செலுத்த வேண்டும்.
 
4 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவர், 70 ஆயிரத்து 500 ரூபாவும், 5 இலட்சம் ரூபா வருமானம் பெறும் நபர் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாவையும் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
 
7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வருமானம் பெறும் நபர் ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாவும், 10 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா வருமான வரியாக செலுத்த நேரிடும்.
 
எவ்வாறாயினும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த சம்பளம் பெறும் தனிநபருக்கு இந்த வருமான வரி விதிப்பு தாக்கம் செலுத்தாது நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image