பாலின அடிப்படையிலான வன்முறைகளை நிறுத்த பெண்களும் தாய்மாறும் முன் வரவேண்டும்!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை நிறுத்த பெண்களும் தாய்மாறும் முன் வரவேண்டும்!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெண்களும் தாய்மாறும் முன்வருதலே மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா தெரிவித்துள்ளார்.

பாலின வன்முறைக்கு எதிரான உலக 16 நாட்கள் பிரசார செயற்பாட்டின் நிமித்தம் கருத்து வௌியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை மற்றும் உலகலாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

தாய்மார் சிறுமிகளை விட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி செல்வதும் சிறுமிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றது.
சிறுமிகள் வீட்டு சூழலுக்கு பிறகு அதிக நேரத்தை செலவிடுவது பாடசாலையிலாகும் எனவே பெற்றோருக்கு அடுத்து சிறுமிகள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியவர்களாக கல்விதுறை சார்ந்தவர்கள் காணப்படுகின்றனர்.

சிறுமிகளுக்கு கொடுக்கப்படும் விழிப்புணர்வானது அவர்கள் சார்ந்த குழுக்களின் மூலமே தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமையப்பெற வேண்டும். பாடசாலையின் பின்னர் பாதையிலும் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெற்றோர் விரும்புவதில்லை, பெண​ைபிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் எனவே வெளியில் கொண்டு வந்து விடாதீர்கள் என்று பெற்றோர்கள் ஒதுங்கி விடுகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறைகளில் ஈடுப்பட்டவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மூலம் தகுந்த தண்டனைகள் கிடைக்கப்பெறவில்லை, எனவே அவர்கள் தொடர்ந்தும் அந்த வன்முறைகளில் ஈடுப்படுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. கடுமையான சட்டங்களின் மூலமே பெண்கள் மற்றம் சிறுமிகள் மீதாக அடக்கு முறைகளை முடிவுக்க கொண்டு வர முடியும் என்பதால் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறிப்பாக பெண் பிரதிநிதிகள் இதற்கான குரலை பாராளுமன்றத்தில் அழுத்தமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்று அவர் கருத்து வௌியிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image