மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்கள் ஒரே மேடையில் சங்கமம்!

மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்கள் ஒரே மேடையில் சங்கமம்!

மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இர்ண்டு தொழிற்சங்கங்களும் ஒரே மேடையில் சங்கமித்துள்ளன.

அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான "தாயகம்" இன்று (30) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி. ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Photo_4.jpg

சிறப்பு அதிகளாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வி. இராதாகிருஷ்ணன் எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றார். அத்துடன், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் இ.தொ.காவின் சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலர் இவ்வாறு சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

Photo_3.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image