தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

எந்தவொரு வேலை நிறுத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர் தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு அமைச்சரவை பேச்சாளரும், ஊடக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சருமான பந்துல குணவர்தன தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்க செய்தி திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவையாகும். அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சில சந்தர்ப்பங்களில் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கூட பெற்றுக் கொள்ளவும் நேரிடும் என அமைச்சர் தெரிவித்தார்.

தனக்கு கீழே உள்ள நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் தான் முயற்சி எடுப்பதாக கூறிய அமைச்சர், எந்தவொரு வேளையிலும் ரயில் சாரதிகளுக்கு தாம் விரும்பியவாறு வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள ரயில் தொழிற்சங்க யாப்பில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ரயிலுக்கு தேவையான சாரதிகளின் அளவைவிட ஒரு ரயிலுக்காக மேலதிகமாக சாரதிகளை பயன்படுத்துவதாலும், ரயில் ஒன்றிற்காக அதிகளவு இயக்குனர்களை பணியில் ஈடுபடுத்துவதால் செலவு அதிகரித்துள்ளதாக பல பிரிவுகளில் இருந்தும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனம் அது தொடர்பாக கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image