தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு, கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.  

இதன்படி, அனைத்து கைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கு, கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக, செயற்பாட்டு செலவீனம் மேலும் அதிகரித்துள்ளமையால், நாளை மறுதினம் அமுலாகும் வகையில் சேவைக்கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கையின் முன்னனி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.  

நாளை மறுதினம், 5 ஆம் திகதி முதல் கைபேசி, நிலையான இணைப்பு, முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு கட்டணங்கள் மற்றும் இணையத்தள கொடுப்பனவுகள் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.  

அத்துடன், தொலைக்காட்சி சேவைக் கட்டணத்தை 25 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட வற் எனப்படும் பெறுமதி சேர் வரியானது 12 சதவீத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டமைக்கு அமைய, கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image