ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் - சட்டத்தரணிகள் சங்கம்

ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் - சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று (21) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் காலி முகத்திடலுக்கான வீதிகளை அடைத்து பொதுமக்களை அப்பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்திருந்தமை வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. அப்பகுதிக்குள் நுழைய முயன்ற சட்டத்தரணிகள் படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். ஆக இரண்டு சட்டத்தரணிகள், அவர்களது தொழிலை முன்னிறுத்தி உள்ளே செல்ல முயற்சித்த சட்டத்தரணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஆயுதமில்லாத பொது மக்கள் பாதுகாப்புத் தரப்பினால் தாக்கப்படும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளன.
ஒரு சட்டத்தரணி மற்றும் சில ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்தும் சட்டத்தரணிகள் சங்கம் அறிந்துள்ளது.

பொதுமக்களை குறிவைக்கும் ஆயுதத்தரப்பின் நியாயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சஙகம் வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சட்டம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளிலேயே பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகளை பயன்படுத்துவது வெறுக்கத்தக்கது மற்றும் நமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
.
இந்த சம்பவங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு உத்தரவு பிறப்பித்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image