ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்த அமைச்சு

ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்த அமைச்சு

 

யூரியா உரத்தை வினைத்திறனுடன் விநியோகிக்கும் நோக்கில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 6 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டிற்கு வரும் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கமநல நிலையங்களுக்கு கொண்டு சென்று, இறுதியில் விவசாயிகளிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக விவசாய அமைச்சு, கமநல சேவைகள் திணைக்களம், தேசிய உர செயலகம், இலங்கை உர நிறுவனம் மற்றும் வர்த்தக உர நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்களின் விடுமுறைகள் இக்காலப்பகுதியில் இரத்து செய்யப்படவுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image