அரச எதிர்ப்பு ஹர்த்தாலினால் முழுமையாக முடங்கிய மலையகம்!

அரச எதிர்ப்பு ஹர்த்தாலினால் முழுமையாக முடங்கிய மலையகம்!

 நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்று (06) ஹர்த்ததால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது. மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொது போக்குவரத்து சேவையில் இருந்து தனியார் பேருந்துகள் விளகியதன் காரணமாக பொது போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு சில அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் முழுமையாக பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் ஒரு சில தோட்டங்களில் கருப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளதுடன். சில தோட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

இரயில் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதனால் மலையக இரயில் நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.
பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் பங்கு பற்றிய நிலையில் மலையகத்தில் காணப்படும அரச நிறுவனங்களும் மூடிய நிலையில் காணப்படுகினறன.

மலையகத்தின வியாபார துறையினரும் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி தமது வியாபார ஸ்தாபனங்களை மூடியதால் மலையக நகரங்கள் முழுவதுமாக கடைகள் பூடப்பட்டு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

06 3

06 04

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image