ஹர்த்தால் தொடர்பில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு

ஹர்த்தால் தொடர்பில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு
நாளை (06) ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோருடன், அகில இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம், இலங்கை தொழில்சார் அதிபர் சங்கம், அதிபர் சேவை சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் நேற்று (04) கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில், ஒட்டுமொத்த மக்களும் பாரிய துன்பத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதற்கு பொறுப்பு கூறவேண்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அவ்வாறே ஏப்ரல் 28ஆம் திகதி நாட்டில் உள்ள அரச,  பகுதி நிலை அரச மற்றும் தனியார் துறை மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் ஆகியோருடன் பங்கேற்புடன் பாரிய வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் வர்க்கம் வலியுறுத்தியது.
 
தற்போதைய ஆட்சியாளர்கள் பொது மக்களின் கருத்துக்கு இதுவரை செவிசாய்க்காத காரணத்தால், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்  போராட்டத்தை முன்னெடுக்க அறிவித்துள்ளன. 
 
இதற்கமைய ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் மே மாதம் 6ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ஹர்ததாலில் ஈடுபட உள்ளதாக தாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இதனூடாக அறியப்படுகின்றது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் செய்திகள்
 
 
 
No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image