அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை: ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை முன்வைப்பு

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை: ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை முன்வைப்பு

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து சலுகை கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையானது அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூழ்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்றையதினம் (20) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாரிய நிதி நெருக்கடிக்கு முழு நாடும் முகம்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசேவை உயரதிகாரிகள் நிறைவேற்ற அதிகாரிகளின் கொடுப்பனவுகள் வசதிகள் மற்றும் சிறப்புரிமைகள் என்பன எதுவும் நிறுத்தப்படவில்லை என்பது மிகத் தெளிவான விடயமாகும்.

உயர் நிலையில் உள்ளவர்கள் அனைத்து வகையான சிறப்புரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கும் சாதாரண அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மீது சுமத்தப்படும் இந்த சுமைக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.

எரிபொருள் விலை தாங்கிக் கொள்ள முடியாத அளவில் அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக பஸ் கட்டணம் 37 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே நாளாந்தம் அரச சேவையில் ஈடுபடுகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளால் இந்த நிலைமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள், பேக்கரி உற்பத்தி உணவுகள் உள்ளிட்ட அனைத்து அனைத்தும் எரிபொருள் விலை அதிகரிப்புடன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பஸ் கட்டணம் முச்சக்கரவண்டி கட்டணம் என்பனவும் அதிகரித்துள்ளன. 

இதனால் அரசு சேவை உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கத்தினர் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்துள்ள நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமைக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எரிபொருள் விலை, பஸ் கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து போக்குவரத்து கட்டணங்களையும் குறைப்பதற்கு அல்லது நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அலுவலக சேவைக்கு சமூகமளித்தல் மற்றும் களப் பணிகளை மேற்கொள்வதில் இருந்து விலக வேண்டி ஏற்படும் எனவும், இந்த நிலைமையை தடுப்பதற்காக அரசாங்கம் அரசாங்கத்திற்கு சில யோசனைகளை முன் வைக்கின்றோம்.

அரச நிறுவனங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்காக மற்றும் அலுவலகத்தில் கடமையை நிறைவு செய்து வெளியேறும் காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், இலவசமாக போக்குவரத்து வசதிகளை வழங்குதல், அலுவலக போக்குவரத்து சேவையை வழங்குதல், அலுவலகத்திற்கு வேலைக்கு சமூகமளிப்பதை சம்பளத்துடன் கூடிய வாராந்தம் சில நாட்களுக்கு மட்டுப்படுத்தல், ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுவழி க்கு அவதானம் செலுத்துதல் என்ற கோரிக்கைகளை முன் வைக்கப்படுகின்றது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை புதிய ஆட்சேர்ப்பு தொடர்பில் பாராளுமன்றில் கல்வி அமைச்சர் தகவல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image