இ.தொ.காவின் புதிய பதவி நியமனங்கள் தொடர்பான முழு விபரம்

இ.தொ.காவின் புதிய பதவி நியமனங்கள் தொடர்பான முழு விபரம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் இடம்பெற்றன.

இதன்போது தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.

நிதிச்செயலாளர் பதவியும் மருதபாண்டி ராமேஸ்வரன் வசமே உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டி நிலவவில்லை.

அதன்பின்னர் பிரதித் தலைவர் உட்பட இதர பதவிகளுக்கு வாக்கெடுப்புமூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜும், அனுசியா சிவராஜாவும் தெரிவாகினர்.

பிரதித் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையும், அரசியல் தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலும், தொழிற்சங்க பிரிவு தேசிய அமைப்பாளராக லோகதாஸ், பிரதி பொதுச்செயலாளராக செல்லமுத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்தும், தொழிற்சங்க பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக பழனி சசிக்குமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் போசகர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் சிவராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உப தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு,

பிலிப்குமார்,

யோகராஜ்,

சென்பகவள்ளி,

சச்சிதானந்தன்,

அசோக்குமார்,

சிவலிங்கம்,

பாரத் அருள்சாமி,

சிவஞானம்,

பாஸ்கரன்,

மார்கட் மேரி,

ராஜமணி,

செல்லசாமி திருகேதீஸ்

CWC.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image