ஏப்ரலில் நிரந்தர நியமனம் பெறவுள்ளோருக்கான நியமனக் கடிதம் தொடர்பான அறிவித்தல்
ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தர அடிப்படையில் நியமனம் வழங்கப்படவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தொடர்பான அறிவித்தல் அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
2021 பெப்ரவரி மற்றும் 2021 மார்ச் மாதங்களில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இணைந்த சேவைகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அடிப்படையில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இணைந்த சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி உள்ளது.
இந்த உத்தியோகத்தர்கள் ஏற்கனவே நிரந்தர அடிப்படையில் அவர்களது சேவை நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவர்களது நிரந்தர நியமனக் கடிதங்கள் அந்த இணைக்கப்பட்ட சேவை நிலையங்களின் தலைவர்களுக்கு கிடைக்கச் செய்யப்படும்.
கொழும்பு, களுத்துறை, கம்பகா மாவட்ட செயலகங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்ட செயலகங்கள் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படுவதுடன், ஏனைய நிறுவனங்களுக்கு பின்வரும் நிகழ்ச்சி நிரலுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
அந்த அறிவித்தல் கீழே