அரச சேவை பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள இடங்களின் விபரம்

அரச சேவை பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள இடங்களின் விபரம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 மார்ச் 14 போராட்டத்தின்போது முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள்

அரச சேவைகள் மற்றும் மாகாண அரச சேவைவைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைகள் பல எண்ணிக்கையிலானவற்றை உங்களுடைய காலம் உட்பட கடந்த காலங்கள் பூராகவும் பல்வேறு காலங்களில் சங்கம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 99 தொடக்கம் 2022 வரை இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான பதவி உயர்வு முறையை இது வரைக்கும் நிறுவப்படவில்லை அதே போன்று கடமைப் பட்டியலும் இல்லை.
 
2. ஒரு காலகட்டத்திற்கும் மேல் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகள் பலவற்றை முதன்மைப்படுத்தி எங்களது சங்கம் ஊடாக 2022.03.14 திகதி மருத்துவ விடுமுறையை அறிக்கை செய்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள்.
 
1. பதவி உயர்வுக்கான ஒரு முறைமை கடமைப்பட்டியல் மற்றும் முறையான இடாமாற்றம் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
 
2. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
 
3. அணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் நிரந்தரம் செய்யும் போது இழந்த சேவைக்காலத்தை பெற்றுக்கொள்ளுதல்.
 
4. அரச, அரை அரசு மற்றும் தனியார் சேவையாளர்களின் சம்பளத்தை ரூபா. 15000 ஆல் அதிகரித்து பெற்றுக்கொள்ளுதல்.
 
5. 2016 ஆண்டின் பின்னர் இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள காப்புறுதியை பெற்றுக்கொள்ளுதல்.
போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைப்போம்.
 
  • கொழும்பு மாவட்ட ஆர்ப்பாட்டம் - பத்தரமுல்ல செத்சிறிபாய முன்றலில் - நண்பகல் 12

  • களுத்துறை மாவட்ட ஆர்ப்பாட்டம் - மாவட்ட செயலகத்திற்கு முன்பாக - நண்பகல் 12 மணி
  • காலி மாவட்ட ஆர்ப்பாட்டம் - காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக - நண்பகல் 12 மணி
  • மாத்தறை மாவட்ட ஆர்ப்பாட்டம் - மாத்தறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக - நண்பகல் 12 மணி
  • ஹம்பாந்தோட்டை மாவட்ட ஆர்ப்பாட்டம் - தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக - நண்பகல் 12 மணி
  • யாழ்.மாவட்ட போராட்டம் - மாவட்ட செயலகத்திற்கு முன்பாக - மதியம் 12 மணி
  • கிளிநொச்சி மாவட்ட போராட்டம் - கிளிநொச்சி நகரில் - நண்பகல் 12 மணி
  • வவுனியா மாவட்ட ஆர்ப்பாட்டம் - மாவட்ட செயலகத்திற்கு முன்பாக - நண்பகல் 12 மணி
  • மட்டக்களப்பு மாவட்ட போராட்டம் - மட்டக்களப்பு நகரில் - நண்பகல் 12 மணி
  • மாத்தளை மாவட்டப் போராட்டம் - வலயக் கல்வி அலுவலகம் முன்பாக - நண்பகல் 12 மணி
  • கண்டி மாவட்ட போராட்டம் - மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் - மதியம் 12 மணி
  • நுவரெலியா மாவட்ட ஆர்ப்பாட்டம் - ஹங்குரன்கெத்த நகரில் - நண்பகல் 12
  • அனுராதபுரம் மாவட்ட ஆர்ப்பாட்டம் - மாவட்ட செயலகத்திற்கு முன்பாக - மதியம் 12 மணி
  • பொலனறுவை மாவட்ட ஆர்ப்பாட்டம் - பொலன்னறுவை பொல சந்தி - நண்பகல் 12 மணி
  • கேகாலை மாவட்ட ஆர்ப்பாட்டம் - கேகாலை பொதுச் சந்தைக்கு முன்பாக - மதியம் 12 மணி
  • இரத்தினபுரி மாவட்ட ஆர்ப்பாட்டம் - மாகாண சபைகளுக்கு முன்னால் புதிய நகரம் - நண்பகல் 12 மணி
  • குருநாகல் மாவட்ட போராட்டம் - குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் - நண்பகல் 12 மணி
 
275555905_5543048225725187_6233004423148210891_n.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image