கோதுமை மா, பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

கோதுமை மா, பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, கோதுமை மா, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் என்பனவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க உள்ளதாக ப்ரிமா நிறுவனம் அறியப்படுத்தி உள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், செரண்டிப் நிறுவனம் இன்று முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள், 10 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

உணவுப் பொதி ஒன்றின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா IOC எரிபொருள் விலையை அதிகரித்தது

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image