தீர்வின்றேல் என்ன செய்வது? சுகாதார தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிவித்தல்

தீர்வின்றேல் என்ன செய்வது? சுகாதார தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிவித்தல்

சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு, அரசாங்கம் உறுதியளித்தவாறு தீர்வு வழங்கவில்லை எனத் தெரிவித்து, 17 சங்கங்கள் இணைந்து இன்று காலை 8 மணிக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.



இந்தப் பணிப்புறக்கணிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இந்தப் பணிப்புறக்கணிப்பானது, நோயாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதற்காக அல். எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சுகாதார அமைச்சின் தலையீட்டை பெற்றுக்கொள்வதற்கானதாகும்.

சுகாதார தொழிற்சங்கத்தினர், இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பின் பின்னர், பணிக்குத் திரும்புவார்கள் என்பதால், நாங்கள் அமைதியாக இருக்கலாம் என்ற கொள்கையில் சுகாதார அமைச்சு உள்ளது. இதன் பிரதிபலன் மிகவும் மோசமானது.  10 நாட்களின் பின்னர் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும்.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு வழங்குவதற்கான, இராஜதந்திரமோ அல்லது தொழில் ரீதியான தன்மையோ சுகாதார  அமைச்சுக்கு இல்லை என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பெருமளவான வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image