ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில்,

"பயிலுநர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020 வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்தல் 2022"

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதால் அது தொடர்பான விண்ணப்பங்களை கோறும் பணி இணைய (Online) வழி ஊடாக மேற்கொள்ள கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக dorec.moe.gov.lk ஊடாக கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து 2022.03.01 திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்.  

கவனிக்கப்படவேண்டும்


கீழ் உள்ள பொது நிபந்தனைகளில் கூறப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்திருப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் நிரந்தரமாக்கும் கடிதம், தேசிய அடையாள அட்டையின் பிரதியினை திணைக்கள தலைவரின் ஊடாக உறுதிப்படுத்தி, உங்களை தொடர்பு கொள்ள முடியுமான தொலைபேசி இலக்கத்தினையும் குறிப்பிட்டு கோரிக்கை கடிதமொன்றினை Scan செய்து அப்பிரதியை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அம் மின்னஞசல் முகவரியில் Subject எனும் இடத்தில் Login Issues என குறிப்பிட்டு உங்களது பெயரினை முதல் எழுத்துக்களுடன் கீழ் கானும் முறையில் குறிப்பிடுவது அவசியமாகும். உதாரணம் : Subject - Login Issues – A.W. Nanayakkara

தகுதிகள்

 

  • இந்த நியமனங்களை வழங்குதல் இலக்கம் 21/0658/340/013 மற்றும் 2021.04.19 ஆம் திகதியஇ இலக்கம் 21/207/315/033-I மற்றும் 2021.12.13 திகதிய அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 ஆம் திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் விதிமுறைகளுக்கமைவாக மேற்கொள்ளப்படும்.
    1. ஆசிரிய நியமனங்களுக்காக முன்மொழியப்பட்ட தொகுதிகள் மற்றும் செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்.
      • பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் செயற்றிட்டம் - 2020 இன் கீழ் ஆட்சேர்ப்புச்செய்யப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர்கள்.
      • 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட (பட்டதாரி பயிலுநர்களுக்கு அரச நிறுவனங்களில் பயற்சியை வழங்குதல்) வேலைத்தி;ட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக பயற்சிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு 2020.01.01 மற்றும் 2021.01.01 ஆம் திகதி தொடக்கம் அபிவிருத்தி அலுவலர் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற குழுவினர்.
      • பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் 2020,2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட டிப்ளோமாதாரர்கள்.
    2. விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொடர்பாக பொது நேர்முக்ப்பரீட்சையொன்றை நடாத்தி அவர்கள் இலக்கம் 188/38 மற்றும் 2014.10.23 ஆம் திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் 7.2.4.4.1(1) வாசகத்திற்கமைவாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் அடிப்படை தகைமைகளை பூர்த்திசெய்துள்ளார்களா என்பதை பரீட்சித்துப்பார்க்கப்படும்.
    3. இலங்கை ஆசிரிய சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் போது 2020 பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்தின்” கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பயிலுநர்களின் ,2020.01.01 ஆம் திகதிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மற்றும் 2021.01.01 ஆம் திகதிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வயது 2019.12.31 ஆம் திகதிக்கு 35 க்கும் குறைவாக கருதப்படும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image