எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு நாளை (07) தொடக்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் மத்திய நிலையம் தீர்மானித்துள்ளதாக இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவால் அதிகரித்தல், பதவியுயர்வுக்கான முறையை அறிமுகப்படுத்தல் மற்றும் கடமைப் பொறுப்புக்களுடன் கூடிய புதிய சேவை யாப்பை உருவாக்குதல், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைக் காலத்தை உருவாக்குதல், அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இல்லாமலாக்கப்பட்ட சேவைக்காலத்தை மீண்டும் நிரந்தர சேவைக்குள் உள்வாங்குதல், 2016ம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களினதும் இல்லாமலாக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இவ்வெதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

துண்டுப்பிரசுரங்கள் பகிர்தளித்தல், எதிர்ப்பு மனுவில் கையெழுத்திடல் மற்றும் நிறுவன ரீதியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த 1999ம் ஆண்டு தொடக்கம் 2021ம் ஆண்டு வரை அபிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் இணைக்கப்பட்டவர்கள் மாகாண மற்றும் பொது அரச சேவைகளில் கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். இது வரையில் அவர்களுக்கு முறையான பதவியயுர்வு முறை செயற்படுத்தப்படவில்லை. மேலும் முறையான கடமைப் பொறுப்புகள் பட்டியல் உருவாக்கப்படவில்லை. அதேபோல் தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு கிடைக்கும் சம்பளம் போதவில்லை. இவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வெதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image