​சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரிப்பு

​சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரிப்பு

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 7 சிறுவர்கள் மாத்திரமே கொவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் தற்போது எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிகாட்டியுள்ளார்.

மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் இரு வாரங்களில் 5 நோயாளர்கள் மாத்திரமே பதிவாகினர். எனினும் கடந்த 5, 6 நாட்களுக்குள் 35 பேர் சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஊழியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பொதுவாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. எனவே பொது மக்கள் இது குறித்து மிகவும் அவதானத்துடன் இருப்பது மிகவும் அவசியம். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதுடன் தேவையில்லாத பயணங்களை தவிர்த்துக்கொள்வதும் நல்லது. மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதும் மிகவும் அவசியம். அவ்வாறு இல்லையெனில் மீண்டும் பாரிய அலையாக பரவக்கூடும் என்றும் ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image