ஊழியர் நம்பிக்கை நிதிய நிதி மோசடி

ஊழியர் நம்பிக்கை நிதிய நிதி மோசடி

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபைக்கு சொந்தமான ஊழியர் பங்களிப்பு நிதியில் கோடிக்கணக்கான ரூபாவை கம்பஹா கிளை ஊழியர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இம்மோசடி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அண்மையிலேயே தான் நிதியச்சபை தலைவராக பொறுப்பேற்றதாகவும் சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரிமால் பெரேராவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தகவல் கேட்டபோது ஊடகவியலாளர்களுடைய தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு பிறகு தகவல் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரமாக அவரிடம் தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டபோதிலும் அவரை தொடர்புகொள்ள முடியாது போனது. சேவையாளர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கமைய நிறுவனத்தினால் 3 வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. கம்பஹா அலுவலகத்தில் இறந்த ஊழியர்கள் மற்றும் 55 வயது பூர்த்தியடைந்த நிதியை திருப்பி பெறப்படாத ஊழியர்கள் உட்பட பலரது நம்பிக்கை நிதிய நிதியை மோசடியாக பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா காரியாலய ஊழியர்கள் சிலருடைய சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு பிரதான காரியாலயத்தில் சிலரும் இம்மோசடியுடன் தொடர்புபட்டுள்தாக சந்தேகிக்கப்படுகிறது. இம்மோசடி தொடர்பில் ஒழுங்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும் விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் சில அதிகாரிகள் கருத்து வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மூலம் - திவயின

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image