What Are You Looking For?

Popular Tags

பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பாடசாலைகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பாடசாலைகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகின்றது. அவ்வாறான மாணவர்களின் ஊடாக சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன.

இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அதேபோன்று அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலைகளின் சேவையாளர்களும் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு செயற்படாவிடத்து மீண்டும் பாடசாலைகளை மூடக்கூடிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image