பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு: யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்ட தகவல்

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு: யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்ட தகவல்
வேலையற்ற பட்டதாரிகளுக்கும், மேல்முறையீட்டின்போது அநீதிக்கு உள்ளான பட்டதாரிகளுக்கும் உடனடியாக நியமனம் வழங்க அரச சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன வலியுறுத்தியுள்ளன.
 
இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்று ஊடக சந்திப்பை நடத்தின இதன்போது கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் மத்தியகுழு உறுப்பினருமான தென்னே ஞானாநந்த தேரர்,
 
2020 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை பூர்த்தி செய்த எனினும், 2019ஆம் ஆண்டு பட்டப்படிப்பு பூர்த்தியாக வேண்டிய,  ஏனெனில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு மற்றும் பரவல் காரணமாக உரிய காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாது போன 5,460  இற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர். இவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
 
இதேநேரம், பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கி தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதில் பயிலுனர்களுக்கான பயிற்சியின்போது, அநீதிக்கு உள்ளான 465 க்கும் அதிகமான  வேலையற்ற பட்டதாரிகள் தங்களுடைய நியமன கடிதம் வரும் வரையில் வீட்டில் இருக்கின்றனர். 
 
அரச சேவைகள் அமைச்சு இவர்களுக்கு இதுவரையில் நியமனக் கடிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 
அனைத்து அரச சேவை நியமனங்களையும் இடைநிறுத்தி நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதத்தைக் காண்பித்துதான் அரச சேவைகள் அமைச்சு இந்த நியமனங்களை வழங்காதிருக்கின்றது.
 
இதுகுறித்து நிதி அமைச்சிற்கு கடந்த 2 ஆம் திகதி சென்று நாங்கள் வினவினோம்.  இதற்கு எவ்வித பிரச்சினையும் தடையும் தங்களால் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், அந்த நியமனங்களை வழங்க முடியும் என்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் 465 க்கும் மேற்பட்ட இந்த வேலையறனற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதது ஏன் என்ற பிரச்சினை எமக்கு இருக்கின்றது.  அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரி அடுத்த வாரத்திற்குள் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.  தற்போது வரை 8 மாத காலமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரச சேவைகள் அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image