பயிலுனர் பட்டதாரிகளை நிரந்தரமாக்குவது குறித்து அமைச்சின் புதிய எதிர்பார்ப்பு

பயிலுனர் பட்டதாரிகளை நிரந்தரமாக்குவது குறித்து அமைச்சின் புதிய எதிர்பார்ப்பு

ஒருவருட பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தரமாக்கும் அடிப்படையில், மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்க சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை,

12 மாத சேவைக் காலத்தின் பின்னர் நிரந்தர சேவைக்கு ஆட்சேர்ப்பதாக கடந்த 17ஆம் திகதி அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் வாக்குறுதியளித்ததாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று சந்தர்ப்பங்களில் ஆட்சேர்க்கப்பட் 53,000 பயிலுனர் பட்டதாரிகளை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி அமுலாகும் வகையில் நிரந்தரமாக்குமாறு கோரி, அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, இது குறித்து அமைச்சின் செயலாளர் கூறியதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயிற்சிக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்போது, நிரந்தரப்படுத்துவதாக உறுதியளிப்பட்டுள்ள நிலையில், பின்னர் இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆட்சேர்க்கப்பட்ட தரப்பினர், 12 மாத பயிற்சிக் காலத்தின் இறுதியில் ஆட்சேர்க்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயிற்சிக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் சந்தர்ப்பத்திலேயே, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளை, பணி இடங்களில் பதவிகளுக்கு இணைக்கப்பட்டு 12 மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர், நிரந்தரமாக்குவதாக அமைச்சின் செயலாளர் கூறியதாகவும் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image