மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் ஊழியர்கள் பட்டினி சாவு – வேலு குமார்

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் ஊழியர்கள் பட்டினி சாவு – வேலு குமார்

ஏறக்குறைய 4000 தோட்ட தொழிலாளர்கள் பட்டினியில் இருக்கவேண்டிய நிலையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றம் போது மக்கள் தோட்ட அபவிருத்தி சபையின் தோட்ட தொழிலாளர்களுக்கு 10ஆம் திகதி வழங்க வேண்டிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்கு காரணம் பெருந்தோட்ட அமைச்சில் இருக்க வேண்டிய துறையை தூக்கி விவசாய அமைச்சிற்கு கொடுத்து அங்கே காணிகளை பிரிப்பதற்கு பல இலட்சம் ரூபா சம்பளத்தில் ஒருவரை உள்வாங்கி காணிகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் இந்த அரசாங்கம் வங்குரோத்து அடைந்து விட்டது என்பதற்கு இன்னுமோர் அறிகுறியாக இருக்கின்றது. நாளை மறுதினம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் ஊழியர்களுக்கான முழுமையான சம்பளம் வழங்கப்படாவிட்டால் அந்த ஊழியர்களுடன் இணைந்து இந்த அரசிற்கு எதிராக செயற்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image