தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

பொது இடங்களுக்கு செல்லும்போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை விரைவில் கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 
கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை நேற்று திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது சுகாதார அமைச்சர் இதனை கூறினார்.
 
சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அதற்கமைய, கொவிட்-19 ஒழிப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
 
நாட்டின் மொத்த சனத்தொகையில் தற்போது வரையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image