அனைத்து கட்சி மாநாட்டை கூட்ட முடிவு செய்துள்ள ஆசிரியர் சங்கங்கள்

அனைத்து கட்சி மாநாட்டை கூட்ட முடிவு செய்துள்ள ஆசிரியர் சங்கங்கள்

சர்வதேச ஆசிரியர் தினம் நிமித்தம் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (06) நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி அதிபர் ஆசிரிய் சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டமானது எந்த காரணம் கொண்டும் இடைநிறுத்தப்படாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் மூல கற்பித்தலை நிறுத்தியதனூடாக ஆரம்பிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு இன்றுடன் 87 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.

சம்பள பிரச்சினையை தீர்க்க அனைத்து கட்சி மாநாட்டை கூட்ட முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் சிரேஷ்ட துணை செயலாளர் இந்திக பரணவிதான, கூறினார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரச்சனைகளுக்கு விவாதங்கள் மூலம் தீர்வு காணப்படும்போது, போராட்டங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image