ஆசிரியர் போட்டிப்பரீட்சை நிறுத்தம்- பயிலுநர் பட்டதாரிகளுக்கு வாய்ப்பா?

ஆசிரியர் போட்டிப்பரீட்சை நிறுத்தம்- பயிலுநர் பட்டதாரிகளுக்கு வாய்ப்பா?

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நோக்கில் நடத்தப்படவிருந்து போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மத்திய மாகாணம் ஆகிய 4 மாகாணங்களில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் நோக்கில் போட்டிப்பரீட்சை நடத்துதவற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. சுமார் 30,000 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர் என்று அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்பதாரிகளிடமிருந்து பரீட்சைக் கட்டணமாக ரூபா. 1000.00 அறவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று விண்ணப்பதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போட்டிப்பரீட்சையை நடத்தாமல் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள பயிலுநர் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன

லங்காதீப

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image