What Are You Looking For?

Popular Tags

பயிலுநர் பட்டதாரிகளுக்கு மூன்று மாததத்திற்குள் நியமனம்?

பயிலுநர் பட்டதாரிகளுக்கு மூன்று மாததத்திற்குள் நியமனம்?

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டு தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் 53,000 பேருக்கு மூன்று மாத காலத்திற்குள் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர், ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு இப்பயிலுநர் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பயிலுநர் பட்டதாரிகளுக்கான பயிற்சிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அது நியாயமான விடயமல்ல என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே குறித்த பட்டதாரிகளை விரைவில் சேவையில் இணைப்பது தொடர்பான பொறுப்பை கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசசேவை, மாகாணசபைகள் , உள்ளூராட்சிசபை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மற்றும் நீர் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பயிலுநர் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பிரச்சினையிருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து மிகுதி நிலுவை கொடுப்பனவுடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image