நாட்டில் நாளாந்தம் 5,000க்கும் அண்மித்த எண்ணிக்கையில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில்,
சமூகத்தில் சுமார் 50,000 கொவிட் தொற்றாளர்கள் வரை இருக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்தியருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கேனும் நீடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்