அதிக வேலைக்கு நிர்ப்பந்திக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!

அதிக வேலைக்கு நிர்ப்பந்திக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!

 தலவாக்கலை தோட்டம் கட்டுக்கலை பிரிவு தொழிலாளர்கள் பணி நிருத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மஸ்கெலிய பெருந்தோட்ட கம்பனியின் தலவாக்கலை தோட்டம் கட்டுக்கலை பிரிவின் 10 தொழிலாளர்களுக்கு தோட்ட முகாமைத்துவம் தொழில் வழங்காத காரணத்தினால் தோட்டத்தின் அனைத்து தொழிலாளர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும்; ஒரு தொழிலாளர் ஒரு நாளைக்கு தேயிலை செடிகளுக்கு 8 கலன் கிருமி நாசினி அல்லது இரசாயன பதார்த்தத்தை தெளித்தல் போதுமானது என்ற வரையறை காணப்பட்டது. ஆனாலும் தற்போது ஒரு நாளைக்கு 14 கலன்கள் கிருமிநாசினி தெளித்தால் மாத்திரமே அவருக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ரூபா ஆயிரம் வழங்க முடியுமென தலவாக்கலை தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறினர்.

தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை நிராகரித்த தொழிலாளர்கள் வழமைபோல் தம்மால் முன்னெடுக்கப்பட்ட வகையிலேயே கிருமி நாசினிகளை தெளிக்க முடியுமென கூறியதை தோட்ட நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளதுடன் அல்லாவிட்டால் ஒரு தொழிலாளர் பிற்பகல் ஒரு மணி வரை 8 கலன் கிருமி நாசினிகளை தெளித்ததன் பின்னர் மாலை மூன்று முப்பது மணி வரை கிலோகிராம் ஒன்று 40 ரூபா வீதம் செலுத்தக் கூடிய வகையில் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமக்கு தோட்ட நிர்வாகம் விதித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தலவாக்கலை தோட்ட நிர்வாகத்தின் இரண்டு கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் ஏற்க மறுத்ததன் காரணமாக குறித்த 10 தொழிலாளர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதாக நிர்வாகம் அநிவித்துள்ளது இதனை எதிர்த்து அனைத்து தொழிலாளர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டடுள்ளதுடன் தொழிலாளர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு முறையிட்டுள்ளதுடன் தோட்ட நிர்வாகமும் தோட்டத்தின் தொழிலாளர் பிரதிநிகளும் பரஸ்பரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் தம்மால் ஒரு நாளைக்கு இரு வேறுபட்ட வேலைகளை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தமக்கு ஒதுக்கப்பட்ட கிருமிநாசினி தெளித்தல் வேலையை மாத்திரமே செய்ய முடியும் என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கும் அதே சமயம் இதுவரை காலம் எவ்வாறான தொழில் விதிமுறைகள் இருந்ததோ அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது; கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் தாம்; பல்வேறு வகையான சவால்களுக்கும் அடக்கு முறைகளுக்கு உட்பட்டு தமது தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வருவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள தெரிவிக்கின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image