ஆட்கடத்தலை முடிவுக்கு கொண்டுவர தீவிர கவனம் செலுத்த வேண்டும்

ஆட்கடத்தலை முடிவுக்கு கொண்டுவர தீவிர கவனம் செலுத்த வேண்டும்

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தங்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்க நேரிடும் என அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

ஜுலை 30 ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு, அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.செந்துராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆட்கடத்தல் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நபர் ஒருவர் கடத்தப்பட்டால், அவன் அல்லது அவள் தங்களின் இன்பமான வாழ்க்கையை இழக்க நேரிடும். நமது கலாசாரத்தில் மக்கள் அவர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தங்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்க நேரிடும். எனவே, ஆட்கடத்தலை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். – எனத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image