கல்விசாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகின்றனர்

கல்விசாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகின்றனர்

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 
பாடசாலை கட்டமைப்புக்குள் பணியாற்றும் தங்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதமையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கல்விச் சேவை துறையினருக்கு தடுப்பூசி செலுத்தலின்போது, கல்விசாரா துறையினருக்கும், ஏனைய துறையினருனக்கும் இடையில் சில மாகாணங்களில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாகாண கல்விப் பணிமனைகளினால், ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் மாத்திரம், பொது சுகாதார பரிசோதகர் பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கல்விசாரா ஊழியர்களின் பெயர் விபரங்கள் பொது சுகாதார பரிசோதகர் பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படாமையானது கவலைக்குரிய விடயமாகும்.
 
கல்வி அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறித்து சுகாதார துறையினருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி கல்விசாரா ஊழியர்கள் தங்களின் பணிகளில் இருந்து விலக உள்ளதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image