தொழிலை இழந்துள்ள முறைசாரா துறை பணியார்களின் பிரச்சினைகளில் தலையிட கோரிக்கை

தொழிலை இழந்துள்ள முறைசாரா துறை பணியார்களின் பிரச்சினைகளில் தலையிட கோரிக்கை

ப்ரொடெக்ட் அமைப்பின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் (12) சந்தித்துள்ளனர்.

வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முறைசாரா தொழில் துறையை சேர்ந்த பணியாளர்களே அவரை சந்தித்துள்ளனர். கோவிட்-19 பரவலுக்கு மத்தியில் தங்களது தொழில் இழக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கடிதம் ஒன்றை அவரிடம் கையளித்துள்ளனர்

விசேடமாக தொழிற்படையில் பெரும்பாலானோரை பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா தொழில்துறையை சார்ந்த தொழிலாளர்களுக்காக, இலங்கையில் சிறந்த தொழில் நிபந்தனைகளையும், தொழில் உரிமைகளையும் காண முடியவில்லை. எனினும், பொருளாதாரத்திற்கு அவர்கள் பெரும் பங்களிப்பை செய்கின்றனர்.

வீட்டுப் பணியாளர்கள், எந்த ஒரு தொழில் உரிமையும், சட்ட ரீதியான பாதுகாப்பும், அங்கத்துவ முறைமையும் சிறந்த தொழில் நிபந்தனை என்பதை இல்லாதுள்ள தொழிலாளர்கள் தரப்பாகும். இவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட ஐடுழு ஊ 189 சமவாயத்தை இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனிடம் இதன்போது அவர்கள் கோரியுள்ளனர்.

1500 வீட்டுப் பணியாளர்கள் எங்களது சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளனர். தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில் அவர்களில் 75 சதவீத மாணவர்களுக்கு தொழில் இல்லாது போயுள்ளது. இதனால் அவர்கள் தற்போது பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கொவிட் பரவல் நிலை நிறைவடையும் வரையில் அரசாங்கம் மூலமாக நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றுக்கு வலியுறுத்துமாறு கோரியுள்ளனர்.

முறைசாரா தொழிலாளர்கள் சார்பில் இயன்ற உச்சபட்ச தலையீட்டை மேற்கொண்டு தங்களின் சிறந்த வாழ்க்கைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு இதன்போது கோரப்பட்டதுடன், இந்தக் காரணங்கள் தொடர்பில் தாம் தமது உச்சபட்ச தலையீட்டை வழங்குவதுடன், நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வேலை திட்டத்தை மேற்கொள்வது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image