பாடசாலை ஆரம்பிக்கப்பட்டாலும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டாலும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோதிலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் கற்றல் செயற்பாட்டில் இருந்து விலக 42 அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி. எல். பீரிஸ் அறிவித்துள்ள நிலையில அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளன.

கல்வியமைச்சர் தெரிவித்தாற்போன்று ஓகஸ்ட் மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் தாம் பாடசாலைக்கு சென்ற போதிலும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து விலகியிருக்கப்போவதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமது போராட்டத்திற்கு ஏற்கனவே 42 சங்கங்கள் ஆதரவு வழங்கியிருப்பதாக அதிபர்தரத்தினர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

இல்லாமாலாக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் சம்பள உரிமையை மீள பெறுவதற்கு தொண்டுச் சேவையான ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடும் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது மற்றும் மூவாயிரம் பாடசாலைகளை மூடுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார்.

மவ்பிம

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image