அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளத்தை வழங்க கோரிக்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளத்தை வழங்க கோரிக்கை
2021 ஜனவரி முதலாம் திகதி பணி நிரந்தரமாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான  3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் தலைவர் லக்மால் திசாநாயக்கவினால் நேற்று (29) கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிககை  விடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
2021 ஜனவரி முதலாம் திகதி பணி நிரந்தரமாக்கபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிலுவை சம்பளம் வழங்கப்படாமை தொடர்பானது
 
01. 2019ஆம் ஆண்டு ஆட்சேக்கப்பட்ட பயிலுனர்களுக்கு 2021 ஜனவரி மாதம் முதலாம் திகதி நிரந்தர பணி நியமனம் வழங்குவதற்கு 2021 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
02. இதுவரையில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பலவற்றில் (மாகாண அரச சேவை உட்பட) ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை என எமது சங்கத்துக்கு  தகவல் கிடைத்துள்ளது.
 
03. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.  நீதி அமைச்சிற்கு ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளது.
 
04. இதுவரையில் நிலுவை சம்பளம் வழங்கப்படாத அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் தொடர்பான தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
05. இது குறித்து நீங்கள் அவதானம் செலுத்தி 2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க குறித்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். - என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
JDletter.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image