நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் அறிவித்தல்

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் அறிவித்தல்

எதிர்வரும் 30 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 
தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்காவிட்டால், இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க  உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 
சுகாதாரத் துறையின் சில தொழிற்சங்கங்களை மாத்திரம் அரசாங்கம் விசேடமாக கவனிப்பதால், ஏனைய சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய சம்பள முரண்பாட்டை நீக்குதல், சம்பள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பதவி உயர்வை முறையாக முன்னெடுத்தல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால், சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில். தங்களுக்கு பேச்சுவார்த்தை ஒன்றுக்கான சந்தரப்பம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 30 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image