வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு: ஜனாதிபதியின் அறிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு: ஜனாதிபதியின் அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையில், வேலையற்ற பட்டதாரிகளுகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் குறை வருமானம் கொண்ட குடும்பங்களுக்களின் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பது, தேர்தல் காலத்தில் என்னிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கையாகும். அந்த வகையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, அப்போது தொழில்வாய்ப்பு இல்லாதிருந்த 65,000 பட்டதாரிகளுக்கு அரச தொழில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதற்கு மேலதிகமாக, சாதாரண தரம் சித்தியடையாத, பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்தில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதற்கு நாம் திட்டமிட்டோம். அதன் முதற்கட்டத்தின் கீழ், தற்போது 35,000 இளைஞர், யுவதிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கு பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின் நிறைவில் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆரம்ப வகுப்பு பதவிகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்காலத்தில் ஏனையவர்களையும் விரைவாக இணைத்துக்கொள்ள நாம் நடவடிக்கை எடுப்போம். – என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image