ஆசிரியர்களுக்கு டெப், கைபேசி வழங்குவது தொடர்பில் அரசின் அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு டெப், கைபேசி வழங்குவது தொடர்பில் அரசின் அறிவித்தல்

தொலைக்கல்வி முறைமையில் மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு டெப் கருவி மற்றும் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாங்கள் ஆசிரியர்களின் பக்கம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபடுவதற்காக ஆசிரியர்கள் பாரிய அர்ப்பணிப்பை செய்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அவசியமான டெப் கருவி இல்லை. கைத்தொலைபேசி இல்லை.

எனவே ஆசிரியர்களுக்கு டெப் மற்றும் கைத்தொலைபேசிளை சலுகை விலையில் அல்லது கடன் அடிப்படையில் வழங்குவதற்கு அரச வங்கிகளுடன் தற்போதைய நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image