இலங்கையில் கொவிட் நோயினால் நான்காவது கர்ப்பிணிப்பெண் மரணம்

இலங்கையில் கொவிட் நோயினால் நான்காவது கர்ப்பிணிப்பெண் மரணம்

கொவிட்-19 தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.

இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

திஸ்ஸமஹாராம - யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கொவிட் தொற்றால், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (15) உயிரிழந்தார். அவரின் கருவில் இருந்த 8 மாத சிசுவும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி திஸ்ஸமகாராகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், குறித்த கர்ப்பிணித் தாய் தமது குடும்பத்தாருடன் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்ற 17 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கர்ப்பிணித்தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரின் கணவருக்கும், இரண்டு பிள்ளைகள் உட்பட உறவினர்கள் 7 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக திஸ்ஸமகாராம பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மூலம் - Hirunews.lk

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image