நான்கு மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நான்கு மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மாத்தறை, மாத்தளை, கண்டி, புத்தளம் முதலான நான்கு மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை பொலிஸ் அதிகாரி பிரிவில், உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பொலிஸ் அதிகாரி பிரிவில், உட அப்புவித கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பொலிஸ் அதிகாரி பிரிவில், வலகம்பய கிராம சேவகர் பிரிவின், திப்பட்ட கிராமம் மற்றும் வலகம்பய கிராம சேவகர் பிரிவின, கொஸ்கஸ்தன்ன பகுதியும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின், கொஸ்வத்த பொலிஸ் அதிகாரி பிரிவில் மெத கிரிமட்டியன கிராம சேவகர் பிரிவு ம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தின், கும்புகடே பொலிஸ் அதிகாரி பிரிவின், நிக்கதலுபொத்த கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image