கல்விச்சேவையில் அரசியல் நியமனங்கள்- எதிர்ப்பு போராட்டம் இன்று

கல்விச்சேவையில் அரசியல் நியமனங்கள்- எதிர்ப்பு போராட்டம் இன்று

அதிபர் மற்றும் கல்வி நிருவாக சேவைகளில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் நியமனங்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை 10.00 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விநிர்வாகசேவை சங்கங்கள் ஒன்றிணைந்து இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சின் முன்பாக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டத்தை கல்வியை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image