நுண்கடனில் சிக்கித்தவிக்கும் மலைய பெண்கள்

நுண்கடனில் சிக்கித்தவிக்கும் மலைய பெண்கள்

நுண் கடன் மூலம் பெற்றுக் கொள்கின்ற பணத்தை வீண்விரயம் செய்வதனால் மலையக பெண்கள பிரச்சினைகளை சந்திக்கவேண்டியேற்பட்டுள்ளது என சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி சோபனா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின (14.03.2021) நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு பேசும் பொழுதே தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தங்களுடைய பிள்ளைகளின் திருமண நிகழ்விற்கும் பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் பிற்நத நாள் விழாவிற்கும் ஆலய திருவிழாவிற்குமாகவே அதிகமாக செலவு செய்திருக்கின்றார்கள்.இதன் மூலம் எங்களுடைய மலையக பெண்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக மாறியிருக்கின்றார்கள் 

 

அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில், இன்று இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் பெண்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு விடயமாக மாறியிருப்பது நுன் நிதிக் கடன் என்ற ஒரு விடயம். இதற்காக 26 வீதம் 32 வீதம் 36 வீதம் என வட்டிகள் அறவிடப்படுகின்றது.இந்த கடன் தொகையை மீள செலுத்த முடியாமல் பல சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.

இது ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவருகின்ற காரணத்தால் இதனை எவ்வாறு மலையக பெண்களிடம் இருந்து வெளியே கொண்டு வருவது என்பது தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்கள் சமூக அமைப்புகள் ஏனைய மலையக மக்கள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image