தோட்ட நிறுவனங்களின் செயற்பாடு கவலைக்குரியது - தொழில் அமைச்சர்

தோட்ட நிறுவனங்களின் செயற்பாடு கவலைக்குரியது - தொழில் அமைச்சர்

தோட்டத் தொழிலாளருக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு வேறு சில வழிமுறைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம். இதனால் தாமதங்கள் ஏற்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (15) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டங்கள் மக்களுக்கு சொந்தமானவை. அரசாங்கத்திற்கு சொந்தமானவை.நிறுவனங்களுக்கு இத்தோட்டங்களை குத்தகைக்கே வழங்கியுள்ளோம். அரசாங்கத்தின் தீர்மானத்தை இழிவுபடுத்துகின்றமை மிகவும் கவலைக்குறியது. இன்று அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். எழுத்தாணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எமக்கு ஆவணங்களை அனுப்பியுள்ளனர். அரசாங்கத்துடன் இணங்கி செயற்படுவதை விடுத்து அவர்கள் அரசாங்கத்துடன் மோதி சம்பள நிர்ணயசபை தீர்மானம் தவறானது என்று கூறி நீதிமன்றம் சென்றுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது.

தொழிற்திணைக்களம் என்ற வகையில் சட்டமா அதிபருக்கு அறிவித்தேன். தொழில்திணைக்களம் சார்பில் ஆஜராக சட்டமா அதிபர் இணங்கியுள்ளார். இந்தவழக்கில் விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தி வெற்றிகொள்ள முடியும் என்று நம்புகிறோம். தோல்வியடைந்தால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இந்த சம்பளத்தை வழங்குவதற்கு மேலும் சில வழிமுறைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற முடியும். ஆனால் இதனால் தாமதம் ஏற்படும். தொழிலாளருக்கு கிடைக்கும் சலுகைகளை தாமதப்படுத்தும் முயற்சியிலேயே நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image