எத்தனை நாட்கள் வேலை வழங்க முடியும்? முதலாளிமார் சம்மேளனத்தின் முடிவு இதோ

எத்தனை நாட்கள் வேலை வழங்க முடியும்? முதலாளிமார் சம்மேளனத்தின் முடிவு இதோ

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை, தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வௌியாகியுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, ஆகக் குறைந்த சம்பளத்தை வழங்க தாம் தயார் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேனம் அறிவித்துள்ளது.

எனினும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஏனைய வசதிகள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே தீரமானிக்கப்படும் என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

தம்மால் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விதத்தில் தினமும் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும், வேலை நாட்களை தீர்மானிப்பதில் காலநிலை உள்ளிட்ட பல விடயங்கள் தாக்கம் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை வழங்குவது என்பதனை தற்போதைக்கு கூற முடியாது எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் முன்னறிவித்தல் கொடுத்து, 1992 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தமது தரப்பினரால் வௌியேற முடியும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஏற்கனவே தாம் அனுப்பிவிட்டதாகவும் ரொஷான் இராஜதுரை மேலும் கூறினார்.

மூலம் - newsfirst.lk/tamil 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image